பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை
பள்ளி மாணவர்களுக்குகண் பரிசோதனைதர்மபுரி, நவ. 12-தர்மபுரி ஒன்றியம், கடத்துார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும், 6 முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.இதில், மாணவ மாணவியரின் பார்வைத்திறன் பரிசோதனை செய்து, குறைபாடுள்ள மாணவ, மாணவியர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதில், பள்ளி பொறுப்பாசிரியர் விக்ரமன், பட்டதாரி ஆசிரியர் விக்ரமன், தமிழாசிரியர் வெங்கடேசன் உடனிருந்தனர். இதற்கான, ஏற்பாடுகளை மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் மன்றத்துடன் இணைந்து, உடல் நலச்சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் செய்திருந்தனர்.