மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
இண்டூர்:தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த, பி.எஸ்.அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி, 59, இவர் நேற்று முன்தினம் காலை, 5:15 மணிக்கு வீட்டின் முன் உள்ள, வராண்டாவில் மின்சாரம் தாக்கியதில், மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முனுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.