உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாயிகளுக்கு தேவையான விதைகள் உள்ளன: கலெக்டர்

விவசாயிகளுக்கு தேவையான விதைகள் உள்ளன: கலெக்டர்

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் போதுமான அளவு மழை பெய்துள்ளது. நெல், பயறு, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் என அனைத்து வகை விவசாயத்திற்கும் தேவையான விதைகள் கையிருப்பு உள்ளன. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு பேசினார்.தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை அலுவலர்கள் துறை வாரியான திட்ட விளக்கம் அளித்தனர். கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை