உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இலவச மின் இணைப்புக்கான டி.டி.,யை திருப்பி கொடுத்ததால் விவசாயிகள் மறியல்

இலவச மின் இணைப்புக்கான டி.டி.,யை திருப்பி கொடுத்ததால் விவசாயிகள் மறியல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, சின்னாறு, பேடப்பள்ளி, சின்னகொத்துார் உள்ளிட்ட பல்-வேறு பகுதியை சேர்ந்தவர்கள், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கேட்டு கடந்த, 2012 மற்றும், 2013ல் விண்ணப்பித்திருந்தனர். தட்கல் முறையில் மின் இணைப்பு பெற, இவர்களை நேற்று முன்தினம், 2 லட்சம் முதல், 4 லட்சம் ரூபாய் வரை டி.டி., எடுத்து, கிருஷ்ணகிரி மின்வா-ரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வழங்க, மின்வாரியத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி விவசாயிகள் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் டி.டி.,யை கொடுத்தனர். ஆனால், இதில், 100க்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்-பங்கள் இல்லையென கூறி, மின்வாரியத்தினர் அவர்களுக்கு டி.டி.,யை திருப்பிக் கொடுத்தனர். இதனால், டி.டி.,யை திரும்ப பெற்ற விவசாயிகள், மின்வாரிய செயற்பொறியாளரிடம் வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், சாலை மறி-யலில் ஈடுபட்டனர். அவர்களிடம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, வரும், 22ம் தேதியன்று வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.* தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவல-கத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு கேட்டு, 2.75 லட்சம் ரூபாய் டி.டி.,யுடன் வந்திருந்தனர். ஆனால் மதியம், 3:30 மணியுடன், மின் இணைப்பு முன்ப-திவு முடிந்தது என அறிவித்ததால், ஆத்திரம-டைந்த விவசாயிகள், சாலை மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மின்வா-ரிய செயற்பொறியாளர் பழனி, உதவி செயற்பொ-றியாளர் மணிவண்ணன் ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்தி, உயர் அதிகாரியிடம் பேசி, மீண்டும் மனுக்களை பெற நடவடிக்கை எடுக்கப்-படும் என தெரிவித்ததால், மறியலில் ஈடுபட்ட-வர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை