உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எள்ளுக்கு உரிய விலை நிர்ணயம் கோரி பென்னாகரத்தில் விவசாயிகள் மறியல்

எள்ளுக்கு உரிய விலை நிர்ணயம் கோரி பென்னாகரத்தில் விவசாயிகள் மறியல்

பென்னாகரம்,பென்னாகரம், வேளாண் ஒழுங்குமுறை விற்பணை கூடத்தில், முதன் முதலாக எள்ளு கொள்முதல் செய்வதாக, கடந்த சில நாட்களுக்கு முன், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதையடுத்து, பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காலை, 8:00 மணி முதலே, 1500க்கும் மேற்பட்ட மூட்டைகளில், எள் கொண்டு வந்தனர். வேளாண் விற்பன‍ை நிலைய அதிகாரிகள் மாலை, 3:00 மணியளவில், உள்ளூர் வியாபாரிகளின் சோதனைக்கு பின் குறைந்தபட்சம், 80 ரூபாய், அதிகபட்சமாக ஒரு சிலருக்கு மட்டும், 114 ரூபாய் விலை நிர்ணயம் செய்தனர். இந்நிலையில், வெளியூர் வியாபாரிகளை அழைத்து விலை நிர்ணயம் செய்யாமல், உள்ளூர் மண்டி உரிமையாளர்களை வைத்து, விலை நிர்ணம் செய்ததால், உரிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி நேற்று மாலை, 5:00 மணிக்கு தர்மபுரி - பென்னாகரம் சாலையில், அம்பேத்கர் சிலை அருகே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் விரைந்த பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்தரம், டி.எஸ்.பி., சபாபதி, வேளாண் விற்பணை அலுவலர் இளங்கோவன், செயலாளர் அருள்மணி உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் திங்கட்கிழமை ஏலம் நடத்தி, குறைந்த பட்ச விலையாக, 95 ரூபாய் நிர்ணயம் செய்வதாக உறுதி அளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை