மீன்துறை ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்
தர்மபுரி, தமிழக அரசின், மீன்துறை ஊழியர் சங்கத்தின், மண்டல பொதுக்குழு கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் நந்தகுமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சின்னசாமி, மண்டல செயலாளர் சக்தி உட்பட பலர் பேசினர்.மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவசிய பணிகளின்றி பணிபுரிய கட்டாயப்படுத்தக் கூடாது. மேட்டூர் அணை, அரசு மீன் பண்ணையில் பணியாளர்களை, 8 மணி நேரத்திற்கு மேல், பணிபுரிய கட்டாய படுத்தக்கூடாது. முகவரியற்ற மனுக்கள் மீது, விசாரணை என்ற பெயரில், கடைநிலை ஊழியர்களை துன்புறுத்த கூடாது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.