உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தர்மபுரி: தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்-ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பிளஸ் 1 படிக்கும், 82 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் பழனி-சாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரியசாமி, ராதிகா ஆகியோர் தலைமை வகித்தனர். தி.மு.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர், எம்.எல்.ஏ.,வுமான மதியழகன், 800 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ