உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நல்லம்பள்ளி வாரச்சந்தையில், 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை ஆட்டு சந்தை கூடியது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆடுகளை வாங்க, விற்க வந்திருந்தனர். அக்.,20 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இறைச்சிக்கான தேவை அதிகரித்தது.நேற்று நடந்த ஆட்டு சந்தையில், 800க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் ஆடுகள், 7,000 ரூபாய் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை மொத்தமாக, 2 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் வரும், 18 சனிக்கிழமை அன்று நடக்கவுள்ள தீபாவளி சிறப்பு சந்தையில், ஆடுகள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை