உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தடகள போட்டியில் தங்க பதக்கம் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

தடகள போட்டியில் தங்க பதக்கம் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மன்னாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு, கூலித்தொழிலாளி. இவர் மனைவி லட்சுமி. இவர்களுக்கு, 4 குழந்தைகள். இவர்களது இளைய மகன் தனுஷ், 21, அரூர் அன்னை நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் இருந்தே தடகள போட்டிகளில், பல்வேறு சாதனைகளை படைத்து வந்தார். கல்லுாரி பருவத்திலும் விடாமுயற்சியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வென்று, சாதனை படைத்து வந்தார்.தற்போது கல்லுாரி நிர்வாகத்தின் மூலம், நேபாள நாட்டில் நடந்த, சர்வதேச அளவிலான, 400 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், ஹாங்காங்கில் நடக்கும், உலக அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அம் மாணவரை, கிராம மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.* ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் மாணவர் தனுஷை பாராட்டி நிதி உதவி வழங்கினார். ஒன்றிய சேர்மேன் உஷாராணி குமரேசன், மாநில மகளிரணி பிரச்சார குழு செயலாளர் டாக்டர் மாலதி, மாவட்ட துணை செயலாளர் சந்திரன் உள்பட, தி.மு.க.,வினர் பலர் மாணவரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி