உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திறனறி தேர்வில் அரசு பள்ளி சாதனை

திறனறி தேர்வில் அரசு பள்ளி சாதனை

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த நத்தமேடு அரசு மேல்நி-லைப்பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் மதியரசி, சசிகலா, அனிஷா, கலைமணி, கவுதம், ஷரிஷ்வர், தமிழ்செல்வன் ஆகிய, 7 பேர் மாநில அளவில் நடந்த தமிழ் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இம் மாணவர்களையும், பயிற்சி அளித்த தமிழாசிரியர்கள் செந்தில், துரை, சம்பத், மோகன் குமார் ஆகியோரையும் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், உதவி தலைமை ஆசிரியர் மல்லிகா, பி.டி.ஏ., தலைவர் முனிராஜ், துணைத்தலைவர் ஜெயக்குமார், எஸ்.எம்.சி., தலைவர் கந்தசாமி துணைத்த-லைவர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி