உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பேக்கரி கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு

பேக்கரி கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார், மொரப்பூர் பகுதிகளில் உள்ள மளிகை கடை, பேக்கரி, ஓட்டல்களில் கடத்துார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு தலைமையில், சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், புகைப்பிடித்தல் கூடாது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, ஒவ்வொரு கடைக்கு முன் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு வைக்கவில்லை எனில், அபராதம் விதிக்கப்படும் என வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சுகாதார மேற்பார்வையாளர் விக்னேஷ் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை