உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவிலில் கொடியேற்றம்

கோவிலில் கொடியேற்றம்

கோவிலில் கொடியேற்றம்தர்மபுரி, நவ. 5-தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட அழகாபுரியில், புதியதாக வராஹி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் நவம்பர், 8ல் நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று காலை, கணபதி, லட்சுமி, நவகிரகஹம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. பின், கொடியேற்றமும் அதை தொடர்ந்து கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. வரும், 7ல் காலை, 9:00 மணிக்கு மேல் இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தகுடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. அடுத்தநாள் காலை, 5:00 மணிக்கு, திருப்பணி எழுச்சி, 2ம் கால யாகபூஜை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு மேல், வராஹி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ