உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓசூர் மலைக்கோவில் உண்டியல் திறப்பு ரூ.23.91 லட்சம் வசூல் காணிக்கை

ஓசூர் மலைக்கோவில் உண்டியல் திறப்பு ரூ.23.91 லட்சம் வசூல் காணிக்கை

ஓசூர்:ஓசூர், மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, 8 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் தேர்த்திருவிழா நடந்த நிலையில், ஓசூர் தேர்ப்பேட்டையிலுள்ள கல்யாணசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில், 2 தற்காலிக உண்டியல்களும், மலை மீது கோவில் வளாகத்தில், 4 தற்காலிக உண்டியல்களும் கூடுதலாக வைக்கப்பட்டன. திருவிழா நிறைவு பெற்று, ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமுவேல் முன்னிலையில், 14 உண்டியல்களும், நேற்று காலை திறக்கப்பட்டன.அவற்றில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகளை, ஓசூர் அதியமான் கல்லுாரி மாணவ, மாணவியர், 103 பேர் மற்றும் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் என, 120 பேர் எண்ணினர். நிரந்தர உண்டியல்களில் மொத்தம், 22 லட்சத்து, 13,401 ரூபாய் மற்றும் தற்காலிக உண்டியல்களில், 1.78 லட்சம் ரூபாய் என மொத்தம், 23.91 லட்சம் ரூபாய் இருந்தது. அதேபோல், 18 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர்கள் சக்தி, பூவரசன், ராமமூர்த்தி ஆகியோர், உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி