மேலும் செய்திகள்
2 குடிசை வீடுகள் தீ எரிந்து நாசம்
06-Mar-2025
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மாரியப்பசெட்டி தெருவை சேர்ந்த நாகலட்சுமி, 40. இவர் அதே பகுதியில் தகர சீட்டால் ஆன, வீட்டில் வசித்து வந்தார். நாகலட்சுமி அவருடைய மகளை காண கடந்த சில நாட்களுக்கு முன், ஈரோடு சென்றார். இந்நிலையில், நேற்று மதியம் பூட்டியிருந்த அவருடைய வீட்டில் இருந்து, புகை வந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இது குறித்து, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Mar-2025