உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிருஷ்ணகிரியில் 3 இடங்களில் ஒளிரும் பெயர் பலகை

கிருஷ்ணகிரியில் 3 இடங்களில் ஒளிரும் பெயர் பலகை

கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி நகராட்சியை அழகுபடுத்தும் விதமாக, ராயக்கோட்டை மேம்பால சந்திப்பு, சேலம் மேம்பால சந்திப்பு மற்றும் திருவண்ணாமலை மேம்பால சந்திப்பு பகுதிகளில், 34.50 லட்சம் ரூபாயில், 'நம்ம கிருஷ்ணகிரி' என்ற ஒளிரும் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதை அமைச்சர் சக்கரபாணி நேற்று முன்தினம் இரவு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், கமிஷனர் ஸ்டான்லிபாபு, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மேடை, பந்தல், அரங்குகள் அமைக்கும் பணிகளை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மதியழகன் எம்.எல்.ஏ., மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை