உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிளை நுாலக கட்டடம் திறப்பு

கிளை நுாலக கட்டடம் திறப்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 87 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட முழு நேர கிளை நுாலக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் நுாலக கட்டத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, அ.தி.மு.க., அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, அசோகன், சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை