உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காமராஜர் வெண்கல சிலை அரசு பள்ளியில் திறப்பு

காமராஜர் வெண்கல சிலை அரசு பள்ளியில் திறப்பு

இண்டூர்: கானாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜ் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, பாலவாடி பஞ்., உட்-பட்ட கானாப்பட்டியில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பேவர் பிளாக் நடை-பாதை, விழா அரங்க மேடை உள்ளிட்டவற்றை பஞ்., தலைவர் கணேசன் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அமைத்துக் கொடுத்தார். அதேபோல், முன்னாள் முதல்வர் காமராஜருக்கு, 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலையை அமைத்தார். இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்-தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பஞ்., தலைவர் கணேசன் தலைமை வகித்து, வெண்-கல சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, காமராஜ் சிலைக்கு, அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில், பள்ளி மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கி-யஸ்தர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை