உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குரங்குகள் தொல்லை அதிகரிப்பு அரூரில் பொதுமக்கள் அவதி

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு அரூரில் பொதுமக்கள் அவதி

அரூர் அரூரில், திரு.வி.க., நகர், பெரியார் நகர், தில்லை நகர், பாட்சா பேட்டை, கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில், குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். கதவு திறந்திருக்கும் சமயம் பார்த்து, கூட்டமாக வீட்டுக்குள் வரும் குரங்குகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை துாக்கி சென்று விடுகிறது. அவற்றை விரட்டினால் கடிக்க வருவதுடன், கேபிள் ஒயர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். மேலும், பழக்கடை, பேக்கரி மற்றும் மளிகை கடைகளுக்குள் ஹாயாக புகும் குரங்குகள் கூட்டம், தின்பண்டங்களை துாக்கி செல்வதால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, ஊருக்குள் அட்டகாசம் செய்யும் குரங்குகளை மீட்டு, வனப்பகுதிக்குள் விடவேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை