உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தைப்பூச தேர் திருவிழா பங்கேற்க அழைப்பு

தைப்பூச தேர் திருவிழா பங்கேற்க அழைப்பு

தர்மபுரி: தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று, தர்மபுரி மாவட்டத்திலுள்ள முருகன் கோவில்களில் கொடியேற்றம் நடக்கிறது.தர்மபுரி நகரிலுள்ள, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை, கொடியேற்றம் மற்றும் சுவாமி வீதி உலா நடக்கிறது. நாளை காலை, ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.வரும், ஜன., 25 ல் பால்காவடி மற்றும் பூக்காவடி எடுத்தல் நடக்கிறது. அன்றிரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பொன்மயில் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. ஜன., 27 அன்று காலை, 10:00 மணிக்கு பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேர்நிலை பெயர்க்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மேலும், அன்றிரவு பிச்சாண்டவர் உற்சவம், வேடற்பறி குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. ஜன., 30 அன்று பூப்பல்லக்கில் சுவாமி ஊர்வலம் மற்றும் சயன உற்சவம் நடக்கிறது.இவ்விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இதேபோல், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில், தைப்பூச தேர்திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி