மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வின்54-வது ஆண்டுதுவக்க விழா
16-Oct-2025
தர்மபுரி: பா.ம.க.,வின், 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' பொதுக்-கூட்டம் தர்மபுரியில் இன்று மாலை நடக்கவுள்ளது. இதில், கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, சேலம் மாவட்டம் மேச்சேரி, பா.ம.க., ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டத்-திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மொரப்பூர் தர்மபுரி ரயில்வே திட்டம் உட்பட நீர்ப்பாசன திட்டங்களுக்காக தொடர்ந்து போராடி வரும், பா.ம.க., தலைவர் அன்புமணி, 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' மேற்கொண்டு வருகிறார். இதில், 'உரிமை மீட்க தலைமுறைக்காக' என்ற தலைப்பில், அவர் மேற்கொண்டு வரும் பயணம், மக்களிடையே பெரும் எழுச்சியை பெற்று வருகிறது.தமிழகத்தில் மீட்கப்பட வேண்டிய, 10 உரிமைகள்: சமூக நீதிக்-கான உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வறட்சிக்கான உரிமை, நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைக-ளுக்கான உரிமை, கல்வி மற்றும் நலவாழ்வுக்கான உரிமை, மது போதை பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை, நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை உள்ளிட்ட உரிமைகளை மீட்-டெடுக்க, தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தர்ம-புரி டவுனில் உள்ள வள்ளலார் திடலில் இன்று நடக்கும் உரிமை மீட்பு பயணம் பொதுக்கூட்டத்தில், 4 தேசிய விருதுகளை பெற்ற சாதனை மற்றும் 108ன் நாயகன், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசுகிறார்.இதில், பா.ம.க., முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்கின்றனர். இதில், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என, அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
16-Oct-2025