உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்களுக்கான கபடி போட்டி

மாணவர்களுக்கான கபடி போட்டி

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்-டிகள், கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று, முதல் மற்றும் 2ம் இடம் பிடித்த பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி, மிட்டப் பள்ளி, அரசு ஆண்கள் பள்ளி இடையி-லான இறுதி போட்டி, ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதா-னத்தில் நடந்தது. ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், சக்-திவேல், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், புளியம்பட்டி அண்ணாமலை, சின்னத்தம்பி, சரவணன், கும-ரேசன் ஆகியோர் பரிசு வழங்கினர். சிறந்த அணிக்கான கோப்-பையை, ஊத்தங்கரை ஆர்.பி.எஸ்., மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பொன்னுசாமி வழங்கினார். நிகழ்ச்சி ஏற்-பாடுகளை, கார்த்திக் மற்றும் பசுமை தாயகம் செல்வம் செய்தி-ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை