உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி நாளாக கொண்டாட்டம்

காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி நாளாக கொண்டாட்டம்

அரூர், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், தலைமையாசிரியை கல்பனா தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புழுதியூரில், கக்கன்ஜி, காமராஜ் சேவா அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில், தலைவர் குமரேசன் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். * தர்மபுரி மத்திய மாவட்ட, த.மா.க., சார்பில், காமராஜரின், 123-வது பிறந்தநாள் விழா, தர்மபுரி சின்னசாமி நாயுடு தெருவில் நேற்று கொண்டாடினர். இதில், தர்மபுரி, த.மா.க., மத்திய மாவட்ட தலைவர் புகழ் தலைமை வகித்து, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* பாப்பிரெட்டிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரகு, பட்டதாரி ஆசிரியர்கள் சுரேஷ், விஜயா முன்னிலை வைத்தனர். பட்டதாரி ஆசிரியர் ராஜாமணி வரவேற்றார். விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மேலாண்மை குழு தலைவர் இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பார்த்தீபன் நன்றி கூறினார். இதே போன்று மோளையானுார், சாமியாபுரம், பொ.மல்லாபுரம், கடத்துார் அரசு பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.* பென்னாகரம் அரு‍கே செங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக நேற்று, கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகிதார். காமராசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது. மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் காமராசரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான பணிகளை பற்றி பேசினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் வளர்மதி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, அனுப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி