கம்பைநல்லுார் ஸ்ரீராம் பள்ளியில் மழலையர் விளையாட்டு தினம்
தர்மபுரி, டிச. 24-தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மழலையர் விளையாட்டு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.விழாவில் மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம், ஜோடி ஓட்டம், போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பிரவீனா மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.