மேலும் செய்திகள்
2,500 மரக்கன்றுகளால் காமராஜர் உருவம்
16-Jul-2025
தர்மபுரி, தர்மபுரி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணஜெயந்தி விழா, மழலையர் பிரிவு வளாகத்தில் கொண்டாடப்பட்டது. பூஜைகளுடன் விழா துவங்கியது. இதில், செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் தனசேகர் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் ரபிக்அகமத், முதல்வர் வள்ளியம்மாள், நிர்வாக முதல்வர் ஓங்காளி, மழலையர் மற்றும் தொடக்கநிலைப்பிரிவு முதல்வர் மலர்விழி, தொடக்கநிலைப் பிரிவு பொறுப்பாளர் ஐஸ்வர்யா தேவி, பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமும், சிறுமியர் ராதை வேடமும் அணிந்து, அனைவரையும் கவர்ந்தனர். குழந்தைகள் ஆடல், பாடல் மற்றும் கதைகள் மூலம், கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தனர். ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாகமாக கலந்து கொண்டு, ஆனந்தத்தை பகிர்ந்து கொண்டனர்.
16-Jul-2025