உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், 39ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை, 9:00 மணிக்கு, மந்திரங்கள் முழங்க கோவில் முன்புள்ள கொடிமரத்தில் அலங்கரித்த திருவிழா கொடியை அர்ச்சகர்கள் ஏற்றினர். இதை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அலங்கரித்த சீதேவி, பூதேவி சமேத நரசிம்ம சுவாமி உற்சவர். கோவில் பிரகார உலா கொண்டு செல்லப்பட்டது. இரவு, அன்னபட்சி வாகனத்தில் உற்சவம் நடந்தது.இன்று காலை, 6:00 மணிக்கு, அபிஷேகம், பிரகார உற்சவம், இரவு சிம்ம வாகனத்திலும், நாளை, ஆஞ்சநேயர் வாகனத்திலும், 6ல், சேஷ வாகனத்திலும் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 7 காலை, 10:30 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றிரவு கருட வாகனத்திலும், 8ல், யானை வாகனம், 10ல் குதிரை வாகனம், 11 காலை, சூரிய பிரபா வாகனம், இரவு சந்திர பிரபா வாகனம், 12ல் புஷ்ப பல்லக்கு, 13ல் சயன உற்சவம், 14ல் சுப்ரபாத சேவை, 15 காலை, 10:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், அலங்காரம், மாலை, ஊஞ்சல் உற்சவம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை