உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு

அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தலை-மையாசிரியராக பையர்நத்தத்தை சேர்ந்த மரகதம், 54, பணிபு-ரிந்து வந்தார். இவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மதியம், 3:05 மணிக்கு நடை-முறை பொறுப்பு, பள்ளி பதிவேடுகள் மற்றும் உபகரணங்களை சரிபார்த்து, பள்ளி ஆசிரியர் சென்னகிருஷ்ணனிடம் ஒப்படைக்க பள்ளிக்கு வந்தார். அப்போது, பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதிலிருந்த அரசு வழங்கிய, 2 லேப்டாப்களை காணவில்லை. இது குறித்து மரகதம் அளித்த புகார்படி, மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை