இயற்பியல் துறை சார்பாக தொடர் உரை கருத்தரங்கம்
இயற்பியல் துறை சார்பாகதொடர் உரை கருத்தரங்கம்தர்மபுரி, அக். 15-தர்மபுரி அடுத்த, பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும், பெரியார் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பில், 'கணினி- உதவி மருந்து வடிவமைப்பில், சமீபத்திய முன்னேற்றங்கள், இயற்பியலின் ஒருங்கிணைந்த பங்கு' என்ற தலைப்பில், முன்னாள் மாணவர்களின் தொடர் உரை கருத்தரங்கம் நேற்று நடந்தது.ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் செல்வபாண்டியன் கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ துறையில், இயற்பியலின் பங்கு குறித்து எடுத்து கூறி வரவேற்றார். முன்னாள் மாணவரும், சவிதா பல்கலைக்கழக உதவி பேராசிரியரான ஜெகந்நாதன் கணினி உதவி கொண்டு, மருத்து வடிவமைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பேசினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கவுரவ விரிவுரையாளர்கள் கோபாலகிருஷ்ணன், செந்தில் மற்றும் இயற்பியல் துறை மாணவர்கள் செய்திருந்தனர்.