உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மலைவாழ் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

மலைவாழ் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

பென்னாகரம், பென்னாகரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், மலைவாழ் மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று, பென்னாகரம் அடுத்த போடூர் செக்போஸ்ட் பகுதியில் நடந்தது. மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி நாகலட்சுமி தலைமை வகித்தார். வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சந்தானம் வரவேற்றார். பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகாலிங்கம், செயலாளர் பாலசரவணன் உட்பட வழக்கறிஞர்கள், மலைவாழ் மக்கள் மத்தியில், சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி நாகலட்சுமி மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து, வன உரிமைகள் சட்டம் குறித்தும், அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள வனத்திற்குள் சென்று தங்களுக்கு தேவையான வன விளைபொருட்களை சேகரிக்கும் உரிமைகள் குறித்தும், விளைபொருட்களை மதிப்பு கூட்டும் பொருளாக தயாரிப்பது, அதன் மூலம் எவ்வாறு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது, காடுகள் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதியில் நடக்கும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும், என்பது குறித்து பேசினார். தொடர்ந்து, மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு காண அங்கிருந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் தெரிவித்தார். இதில், பென்னாகரம் தாசில்தார் பிரசன்னமூர்த்தி, இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவகுமார் உள்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை