வடமாநில தொழிலாளிக்கு ஆயுள்
தர்மபுரி, தர்மபுரி தாலுகா, மாரவாடி பகுதியில் சுதர்சன் கிரானைட் நிறுவனத்தில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஆதித்ய சவுத்ரி, 39, சங்கர் பகன்யா, 25, ஆகிய இருவரும் பணிபுரிந்து வந்தனர். கடந்த, 2022 மார்ச், 6ல் இருவருக்கும் இடையே பணப்பிரச்னையில் துாங்கிக் கொண்டிருந்த சங்கர் பகன்யாவை, ஆதித்ய சவுத்ரி சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டு பெங்களூரு தப்பினார். மதிகோன்பாளையம் போலீசார் ஆதித்ய சவுத்ரியை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிபதி மோனிகா, நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஆதித்ய சவுத்ரிக்கு ஆயுள் சிறை மற்றும், 5,000 ரூபாய் அபராதம், அதை கட்ட தவறினால் மேலும், 2 ஆண்டு சிறை தண்டணை விதித்து உத்தரவிட்டார்.