மேலும் செய்திகள்
தர்மபுரியை புறக்கணித்ததா தி.மு.க., அரசு?
18-Aug-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்ப-ணிகள் ஆணைக்குழு தலைவருமான திருமகள் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மாவட்டத்திலுள்ள, 5 தாலுகா நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற 'லோக் அதாலத்' நேற்று நடந்தது. இதில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள, மொத்தம், 2,850 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு அதில், 1,275 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு, 12.24 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இதில், தீர்வு காணப்பட்டதற்கான ஆணை வழக்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
18-Aug-2025