உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் லோக் அதாலத் ரூ.9.90 கோடிக்கு தீர்வு

தர்மபுரியில் லோக் அதாலத் ரூ.9.90 கோடிக்கு தீர்வு

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த, தேசிய லோக் அதாலத்தில், 9.90 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இது குறித்து, தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான திருமகள் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று லோக் அதாலத் நடந்தது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காரிமங்கலம் தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் நடந்தன. இதில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, 2,150 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 791 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகை, 3.04 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.மேலும் வங்கி வாராக்கடன், 312 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 217 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்க்கப்பட்டு, 6.86 கோடி ரூபாய்க்கு முடிக்கப்பட்டது. மொத்தமாக, 2,462 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,008 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்க்கப்பட்டு, அதற்கான சமரச தொகை, 9.90 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ