உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காமன்தொட்டி வி.ஏ.ஓ., முருகன் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் மாலை, தோரிப்பள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனை செய்தனர்.அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், உத்தனப்பள்ளியிலிருந்து, காமன்தொட்டிக்கு, 30,000 ரூபாய் மதிப்புள்ள, 4 கிரானைட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது.அதனால் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., முருகன் புகார் படி, இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை