மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் தாலுகா மாநாடு
21-Oct-2024
மா.கம்யூ., வட்ட மாநாடு பாப்பிரெட்டிப்பட்டி, --மா.கம்யூ., கட்சி சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி வட்ட, 9 மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகி கிருஷ்ணவேணி மனோகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராசன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாரிமுத்து, மாவட்ட செயலாளர் குமார் பேசினர். மாநாட்டில் புதியதாக, 11 பேர் கொண்ட வட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. வட்ட செயலாளராக தனுஷன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், காலிகரம்பு முதல் மிட்டாரெட்டிஹள்ளி வரை, வனச்சாலை அமைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு ஆலை அமைக்க வேண்டும். ஒரு மூட்டை கிழங்கு, 1,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
21-Oct-2024