உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா.கம்யூ., பிரசார இயக்கம்

மா.கம்யூ., பிரசார இயக்கம்

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: விலைவாசி உயர்வுக்கும், வேலையின்மைக்கும் காரணமான மத்திய, பா.ஜ., அரசின் பொருளாதார கொள்கைகளைக் கண்டித்தும், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், மா.கம்யூ., இன்று முதல், 10 நாட்களுக்கு மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை நடத்துகிறது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம், மொரப்பூர் ரயில் பாதை, வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மா.கம்யூ., சார்பில் ஜூன், 11ல், பாலக்கோடு வட்டம், 12ல், பாப்பாரப்பட்டி பகுதி, 20ல், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி டவுன் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு - பிரசார இயக்கம் நடக்கவுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை