உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம்

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம்

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் வைத்துள்ள பாது-காப்பு கம்பியின் அருகே, 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நீரில் அடித்து வரப்பட்டது. ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடம் வந்து அந்த உடலை மீட்டு, அவர் யார், எப்பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து, விசாரித்து வருகின்றனர். சுற்றுலா பய-ணிகளின் பாதுகாப்பு கருதி, 'டிரோன்' கேமிரா மூலம் பி.டி.ஓ.,க்கள் லோகநாதன், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை