உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் துண்டு இறுக்கியதில் உயிரிழப்பு

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் துண்டு இறுக்கியதில் உயிரிழப்பு

அரூர் :அரூர் அடுத்த கூடலுாரை சேர்ந்தவர் நைனாமலை, 50. இவர், தேன் எடுத்தல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஜெயசீலன் என்பவரது தோட்டத்தில் இருந்த புளிய மரத்தில் தேன் எடுக்க கழுத்தில் துண்டை கட்டி கொண்டும், அதன் மற்றொரு முனையில் சில்வர் பக்கெட்டை கட்டிக் கொண்டும் மேலே ஏறினார். கீழே அவரது மனைவி குமாரி இருந்துள்ளார். மரத்தில் நைனாமலை தேன் எடுக்கும்போது தேனீக்கள் கொட்டியதால் மரத்திலிருந்து வேகமாக கீழே இறங்கினார். அப்போது, மரக்கிளையில் சில்வர் பக்கெட் மாட்டிக் கொண்டதால், மறுமுனையில் கழுத்தில் இருந்த துண்டு நைனாமலையின் கழுத்தை இறுக்கியது. இதில், அவர் மரத்தில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். அரூர் தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மரத்திலிருந்து மீட்டு கீழே கொண்டு வந்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை