உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வர்ணீஸ்வரர் கோவில் அருகில் கொட்டப்படும் இறைச்சி கழிவு

வர்ணீஸ்வரர் கோவில் அருகில் கொட்டப்படும் இறைச்சி கழிவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மிகவும், பழமையான வர்ணீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் அருகில் உள்ள ராஜகால்வாயில் கழிவு நீர் தேங்கியுள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழி, ஆடு மற்றும் மாடு ஆகியவற்றின் இறைச்சி கழிவுகள் ராஜகால்வாயில் கொட்டப்படுவதால், அப்ப-குதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்-தர்கள், அந்த வழியே நடந்து செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில், நடந்து கொள்ளும் இறைச்சி கடைக்காரர்கள் மீது, அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை