உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

பென்னாகரம், பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், அரசு தலைமை மருத்துவமனை பென்னாகரம் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம், சித்த மருத்துவத்துறை, சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளையின் மூலமாக மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடந்தது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை வகித்து வரவேற்று பேசினார். மாணவர்களிடம், யோகா நல்லொழுக்கம் உடற்பயிற்சி, உணவு முறை போன்றவை பற்றியும், சிரிப்பின் பலன்கள் பற்றியும் இயற்கை மருத்துவர் முனுசாமி விளக்கினார். சித்த மருத்துவர் அன்புராணி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, உடல்நலம், மாதவிடாய் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் போன்றவற்றை விளக்கினார். சின்னப்பளத்துார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு உலக வெப்பமயமாதல் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை பற்றி விளக்கினார். இயற்கை முத்துகுமார், மரங்களின் நன்மைகள் பற்றி விளக்கமாக கூறினார். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்றுகள் வீதம், 800 மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை உதவி தலைமை ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அசோக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை