மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: வேலை நேரம், வேலை முறை, வேலை வரம்பு உள்ளிட்ட-வற்றை முறைப்படுத்தக்கோரி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் நாகராஜ் துவக்க உரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் கோகிலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லோகநாயகி விளக்க உரையாற்றினார்.