கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலு-வலகத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 38ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்-பட்டது. அவரது படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மலர் துாவி மரியாதை செலுத்தினார்.* ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா-ரெட்டி, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரி-யாதை செலுத்தினார். * ஊத்தங்கரையில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமையில், ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு, மாலை அணிவிக்கப்பட்டது. * தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில், பாப்பிரெட்டிபட்டி, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னி-லையில், எம்.ஜி.ஆர்., உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.--* பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் கடத்துார், வகுத்தப்பட்டி, வெங்கடச-முத்திரம், பொ.மல்லாபுரம், பொம்மிடியில் நடந்-தது.* அரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மேல்பாட்சா-பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆரின்., சிலைக்கு, அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்-தனர். இதே போல், பொய்யப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்பட பல்வேறு இடங்களில், எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.அ.ம.மு.க., சார்பில், அரூர் பஸ் ஸ்டாண்டிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.