2 குழந்தைகளுடன் தாய் மாயம்
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, தளவாய்ஹள்ளிப்புதுாரை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி வீராசாமி, 28. இவரது மனைவி ரஞ்சனி, 22. இவர்களுக்கு லிப்பிகா, 3 மற்றும் 3 மாத குழந்தை பிரதீஷா என இரு பெண் குழந்தைகள். கடந்த, 4 அன்று ரஞ்சனி, தன் இரு குழந்தைகளுடன், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். அவரது கணவர் வீராசாமி புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.