உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, கெட்டூரை சேர்ந்த, கட்டட மேஸ்திரி மணி, 32. இவரது மனைவி கோகிலா, 25. இவர்களது மகள் ரச்சிதா, 7, மகன் தருண், 4. கடந்த, 21 அன்று கோகிலா மற்றும் குழந்தைகள் என மூவரும் மாயமாகினர். கணவர் மணி புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர் தர்மபுரி அடுத்த, அக்கமனஹள்ளியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 22. இவர், பி.எஸ்சி., படித்து முடித்து விட்டு, அரசு தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த, 22 அன்று ராஜேஸ்வரி மாயமானார். பெற்றோர் புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.தீர்த்தமலை வாரச்சந்தைக்குமே 6ல் மறு ஏலம்அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, வரும், 2025 மே., 7 முதல், 2026 மார்ச், 31 வரை சுங்க வரி வசூல் செய்வதற்கான மறு ஏலம், மே, 6ல் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு, அரூர் மண்டல துணை பி.டி.ஓ., முன்னிலையில் நடக்கும் என, அரூர் ஊராட்சி ஒன்றிய அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை