உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செந்தில் மெட்ரிக் பள்ளியில் ஊக்கமளிக்கும் கருத்தரங்கு

செந்தில் மெட்ரிக் பள்ளியில் ஊக்கமளிக்கும் கருத்தரங்கு

தர்மபுரி: தர்மபுரி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஊக்களிக்கும் கருத்தரங்கு நடந்தது.பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல், சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி, மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். துணைத்தலைவர் மணிமேகலை, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.தொடர்ந்து முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: மாணவர்களுக்கு கல்வி முக்கியமானது. வளர்ந்து வரும் அறிவியல், சமூகம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப பாடமுறைகளும் மாறி வருகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆசிரியர்கள் பாடங்களை கற்று தரும் போது, அதில் கவனம் செலுத்தி பாடங்களை கற்க வேண்டும். மேலும், வீட்டிலும் படிக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் அறிவை மேம்படுத்தி தேர்வுகளில் வெற்றி பெற்று, உயர்ந்த பதவிகளை அடையலாம். படிப்புடன், மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார். பின் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சைலேந்திரபாபு பதிலளித்தார். சிறந்த கேள்வி கேட்ட மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி முதல்வர் வள்ளியம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி