மேலும் செய்திகள்
வேளாண் பல்கலையில் கருத்தரங்கு
20-Jul-2025
அரூர், -தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டியில் அமைந்துள்ள இ.ஆர்.கே., மருந்தியல் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகமும் இணைந்து, மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் கல்லுாரி கலையரங்கில் நடந்தது.இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் சோழவேந்தன் முன்னிலை வகித்தார். மருந்தியல் கல்லுாரி முதல்வர் சிவகுமார் வரவேற்றார். கல்வி புலம் பதிவாளர் மற்றும் பாண்டிச்சேரி அன்னை தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சியியல் கல்லுாரி பேராசிரியர் கவிமணி பேசினார்.ஈரோடு நந்தா மருந்தியல் கல்லுாரி பேராசிரியர் பிரபா, குமாரபாளையம்ஜே.கே.கே. நடராஜா மருந்தியல் கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஸ்வரமூர்த்தி, ஈரோடு மருந்தியல் கல்லுாரி பேராசிரியர் கண்ணன் ஆகியோர், செயற்கை நுண்ணறிவின் பயணம், வடிவமைப்பு உத்திகள், மருந்தியல் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.இ.ஆர்.கே., கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சக்தி, நிர்வாக அலுவலர் அருள்குமார் மற்றும் பல்வேறு மருந்தியல் கல்லுாரியிலிருந்து, 700 மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
20-Jul-2025