தேசிய விளையாட்டு தினம்:வீரர்கள் சைக்கிள் பேரணி
தர்மபுரி:தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடந்த சைக்கிள் பேரணியை, மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கேலோ இந்தியா தர்மபுரி மாவட்ட தடகள மையம் சார்பாக, மறைந்த முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடும் விதமாக, ஆக., 28 முதல், 31 வரை, 50 மீ., தொடர் ஓட்டம், 50 மீ., ஓட்டம், யோகா, கயிறு இழுத்தல், மூத்த குடிமக்களுக்கான, 300 மீ., நடை போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன. நேற்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து, வீரர், வீராங்கனைகளுடன் மிதிவண்டி ஓட்டினார்.இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா உட்பட பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.