உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புதர்மபுரி, டிச. 1-வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயலால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் சில தினங்களாக, கனமழை பெய்து வந்தது. தர்மபுரி மாவட்டத்தில், 12 செ.மீ., வரை கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இப்புயலால், தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சபள்ளி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. * அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை முதல், சாரல் மழை பெய்தது. மழையில் நனைந்தபடி பள்ளிக்கு மாணவ, மாணவியர் சென்றனர். அதேபோல், அரசு அலுவலகங்களுக்கு, கூலிவேலைக்கு செல்‍வோர் காலை நேர மழையால் சிரமத்திற்கு ஆளாகினர். அரூர் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. சாரல் மழையில் நனைந்தபடியே மக்கள் சென்றனர். சாலையோர கடைகளில் வியாபாரம் பாதித்தது. கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர். சாரல்மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி