உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்

அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்

தர்மபுரி, நல்லம்பள்ளி அருகே, அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்ட, ஒரு நாள் முகாம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பண்டஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட ஒரு நாள் முகாம், 'ஸ்வச் பாரத்' துாய்மை பணி நேற்று நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் செந்தில், திட்ட அலுவலர் யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும், ஒரு நாள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். இதில், ஆசிரியர்கள் சசிகுமார், முருகன், கோவிந்தசாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை