உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஏட்டு சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஏட்டு சஸ்பெண்ட்

பாலக்கோடு :பாலக்கோட்டில், லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் ஏட்டுவை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த மதனேரிகொட்டாயை சேர்ந்தவர் சக்திகுமார், 36: இவர் மீதான கொலை மிரட்டல் வழக்கு, பாலக்கோடு ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது. அவரை ஜாமினில் அனுப்ப, பாலக்கோடு ஸ்டேஷனில், கம்ப்யூட்டர் பிரிவில் ஏட்டாக பணிபுரியும் சுரேஷ், 46, என்பவர், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சக்திகுமார், தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார்.போலீசார் அறிவுறுத்தலின்படி, நேற்று முன்தினம், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷன் சென்ற சக்திகுமார், ரசாயனம் தடவிய, 10,000 ரூபாயை, ஏட்டு சுரேஷிடம் கொடுத்தார். அதை அவர் பெற்றபோது, வளாகத்தில் மறைந்திருந்த, தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் ஏட்டு சுரேஷை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ