உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நெல் வயலில் அதிகாரிகள் ஆய்வு

நெல் வயலில் அதிகாரிகள் ஆய்வு

நெல் வயலில் அதிகாரிகள் ஆய்வுஅரூர், டிச. 8- 'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, தரமற்ற நெல் விதையால், 35 நாட்களில் பூட்டு வந்த வயல்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள தனியார் உரக்கடையில், பெரிய பண்ணைமடுவை சேர்ந்த விவசாயிகள் பலர், கோதாவரி என்ற ஆந்திரா ரக நெல் விதைகள் வாங்கி, 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்துள்ளனர். நடவு செய்த, 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு வந்துள்ளது. அதில், நெல்மணிகள் எதுவும் வராது. பதராக போய்விடும். ஏக்கருக்கு விதை நெல், நடவுப்பணி என, இதுவரை, 35,000 ரூபாய் செலவு செய்துள்ளோம். தரமற்ற விதை நெல்லால் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தரமற்ற விதை நெல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் மணி, விதை ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்டோர் நேற்று, பெரிய பண்ணைமடுவில் பாதிக்கப்பட்ட நெல் வயலில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, தீர்த்தமலையில் நெல் விதை விற்பனை செய்யப்பட்ட தனியார் உரக்கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். விவசாயிகள் தனியார் உரக்கடைகளில் விதை வாங்கும்போது, அதற்கான ரசீதை கேட்டு பெற, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை