தர்மபுரிக்கு முதல்வர் வருகை அதிகாரிகள் முன்னேற்பாடு
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் சதீஸ் ஆய்வு மேற்கொண்டார்.தர்மபுரி மாவட்டத்தில், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆக., 17 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அதையொட்டி, அரசு நிகழ்ச்சி நடத்தும் இடம் குறித்து, தடங்கம், காரிமங்கலம் அருகே பைசுஅள்ளி ஆகிய பகுதியில், விழா மேடை அமைப்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், தர்மபுரி, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், தி.மு.க., - எம்.பி., மணி, ஆர்.டி.ஓ., காயத்ரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், பொதுப்பணிதுறை செயற்பொறியாளர் சிவக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.